தமிழ் | English

இலங்கைத்தீவில் தமிழினம் கொடும் யுத்தத்தினால் காலம் காலமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கடந்த மே 2009 இல் நடைபெற்ற யுத்த அழிப்பினால் காலகாலங்களுக்கும்  மாறமுடியாத  பேரழிவைத்  தமிழினம்  சுமந்து  கொண்டிருக்கிறது.

தற்போது  உறவினர்களை  இழந்தும்  உடமைகளை இழந்தும் தமிழினம்> சீர்குலைக்கப்பட்டு சிதைந்துள்ளது. இவ்வாறு சிதைக்கப்பட்டு முகாம்களிலும்> வைத்தியசாலைகளிலும் பல்லாயிரக்கணக்கான  குடும்பங்கள் அத்தியாவசிய  தேவைகள் கிடைக்கப் பெறாமலும்> மீளக்குடியமர்த்தப்படாமலும் தங்கள்  சொந்த  நிலங்களில் உணவு> உடை> வாழ்விடம்> மற்றும் வாழ்வாதார  நம்பிக்கைகள்> தொழில் வாய்ப்புகள் எதுவுமில்லாமல்  வாழ்கின்றனர்.

“இவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தியாக்கவும், உளவளத்தினை மேம்படுத்தவும், சிதைந்து, பிரிந்த உறவுகளைத் தொடர்புபடுத்தவும் புலத்தில் உருவாக்கம்பெற்றுள்ள நிறுவனமே நம்பிக்கை ஒளி (RAY OF HOPE).”