• Ray of Hope Logo
  • Ray Of Hope Opening Ceremony 18.03.2012
latest News
  • லண்டன் “நம்பிக்கை ஒளி “அமைப்பின் நிதி உதவியுடன் பா.உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் தலைமையில் மண்வெட்டிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
  • பா.உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் தலைமையில் 04.04,அன்று(புதன்கிழமை) வட்டக்கச்சி மாயவனூர் தெற்கு கிராமத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு மண்வெட்டிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இன் நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்கப்பிரதிநிதிகள், கமக்கார அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர். சுயமுயற்சியில் சுயமாக வாழ வழி செய்வதே இன் நிகழ்வின் நோக்கம் ஆகும். இது போன்ற மேலும் பல திட்டங்களை நிறைவேற்ற புலம்பெயர் உறவுகளின் ஆதரவை நம்பிக்கை ஒளி நிறுவனத்திற்கு தந்து உதவுமாறு வேண்டுகின்றோம். இத்தகைய திட்டங்களை நிறைவேற்ற நிதியுதவி வழங்கிய புலம்பெயர் உறவுகளுக்கு நம்பிக்கை ஒளி நிறுவனத்தினரும் உதவிபெற்ற தாயகஉறவுகளும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

    04 Apr 2012 16:37pm
  • லண்டன் நம்பிக்கை ஒளி அமைப்பின் நிதி உதவியுடன் மட்டக்களப்பில் ஊனமுற்றோர் பராமரிப்பு இல்லம்
  • யுத்தம் காரணமாக அவயங்களை இழந்து, சமூகத்தால் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வலது குறைந்தோரை பராமரிப்பதற்காக லண்டன் நம்பிக்கை ஒளி அமைப்பின் நிதியுதவியுடன் உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பு மட்டக்களப்பு கல்லடியில் பராமரிப்பு இல்லம் ஒன்றை இன்று திறந்து வைத்துள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்நேசன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நகர பகுதி இணைப்பாளர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும் மத தலைவர்களும் நிறுவனத்தின் பணிப்பாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    22 Mar 2012 01:11am
  • “நம்பிக்கை ஒளி” நிறுவனத்தின் தலைமை பணிமனை லண்டனில் திறந்து வைக்கப்பட்டது.
  • தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்குஉதவும் நோக்கில்ஆரம்பிக்கப்பட்ட நம்பிக்கைஒளி நிறுவனம்நேற்று முந்தினம் ஞாயிற்றுகிழமை (18.03.12) தனத உத்தியோகபூர்வ தலைமை பணிமனையினைலண்டனில் திறந்துவைத்துள்ளது. நேற்று முந்தினம் லண்டன் வெம்பிளிப் பகுதியில் இடம்பெற்ற இத்திறப்பு விழாவில் பிறண்ட்நகரசபை உறுப்பினர் Kana Nakieerathan அவர்கள் பெயர்ப்பலககையை திறந்து வைக்க,ஹாரோ நகரசபை உறுப்பினர் Nanaa Asantay அவர்கள் நாடாவைவெட்டி சம்பிரதாய பூர்வமாக பணிமனையினை திறந்துவைத்தார். நகரசபை உறுப்பினர்களான Mohamad Butt, Thaya Idaikkadar, Suresh Krishna, sasikala Suresh Kirishna, Jems Ali, Kitan Sheth, Kuruba Sheth, உட்பட தாயக உறவுகளுக்காக தொடர்ந்து பங்களிப்பு செய்து வரும் திருமதி. ஜெயசிங்கம் அவர்களும் மங்கள விளக்கினை ஏற்றிவைத்தனர். இந்த நிகழ்வில் பிரித்தானியாவில் இயங்கும் சகல புலம்பெயர் அமைப்புகளைச் சார்ந்த பிரதினிதிகள், ஆலயநிர்வாகிகள், ஊடகவியலாளர்கள், மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் இணைந்து கொண்டு சிறப்பித்தனர். இந் நிகழ்வின் போது நம்பிக்கை ஒளி நிறுவனம் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டது: அப்போது, நம்பிக்கை ஒளிநிறுவனம் கடந்த மூன்று வருடங்களில்2.2மில்லியன் பவுண்ஸ்பெறுமதியான உதவிகளை ‘குடும்பங்களை இணைக்கும்’திட்டத்தின் மூலம் புலம்பெயர் தமிழ் மக்கள்நேரடியாக2500க்கு மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கியதாக அறிவித்தனர். அதைத்தவிர30,000பவுண்டுகள் நன்கொடையாக பெறப்பட்டு மேலும் சில திட்டங்கள் நடைமுறைபடுத்த பட்டதாகவும் தெரிவித்து இருந்தனர்.அவசரசத்திர சிகிச்சை,சிறுவர் பராமரிப்பு,கணவனை இழந்த பெண்களுக்கான உதவி,அங்கவீனமுற்றோர்க்கான பராமரிப்பு இல்லம்,மாற்றுவலு உதவித்திட்டம், குடிநீர் வசதி,மற்றும் சிறுதானிய பயிர்ச்செய்கை போன்ற பல்வேறு வகைஉதவிகளையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்தனர். இதுவரை இலாபநோக்கமற்ற ஒரு நிறுவனமாக இயங்கிவந்த நம்பிக்கைஒளி நிறுவனம் 27.02.12 முதல்அறக்கட்டளை Chatity) நிறுவனமாக பதிவு செய்யப்பட்டதாகவும், இனிவரும் காலங்களில் புலத்திலுள்ள உறவுகளுக்கும் பிற நாட்டு மக்களுக்கும் தமிழ் மக்கள் சார்பில்தமது சேவையை விருத்திசெய்வதாகவும்,அறிவித்தனர். மேலும் தமது அலுவலத்தில்புலத்து மக்களிற்கான செயல்பாடுகளை விரைவாக ஆரம்பிக்கப்படஇருப்பதாகவும் அத்துடன் மருத்துவ ஆலோசனைகள், சட்ட ஆலோசனைகள்,அரச அலுவல்கள் சார்ந்தஆலோசனைகளுடன்,எமது மக்களிற்கு தேவையன அனைத்து உதவிகளையும் ஒரேஇடத்தில் இலவசமாக வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இவை சம்பந்தமான மேலதிக விபரங்களை அறியநம்பிக்கை ஒளி நிறுவனத்தோடு 02086179343 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லதுroh@theroh.org எனும் மின்னஞ்சல் மற்றும் சமூக வலைத்தளமான facebook.com/theroh.org ஊடாகவும் தொடர்புகொள்ளுமாறும்,எமது உறவுகள் அனைவரையும் நம்பிக்கைஒளி நிறுவனத்தோடு இணைந்து செயற்பட வருமாறும் வேண்டுகோள்விடுத்தனர். மேலதிக விபரங்களை அறிய நம்பிக்கைஒளி நிறுவனத்தின் www.theroh.org எனும்இணையத்தளத்தினூடாகவோ அல்லது அலுவலக முகவரியில் ( Unit G05,10 Courtenay Road,East Lane,Business Park,Wemley HA9 7ND,UK ) நேரடியாகவோ பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டது. இவ் விழாவில் பங்குபற்றிய அனைவரும் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஒளி நிறுவனம் செய்து வரும் சேவைகளையும், நன்கொடைகளை நன்கொடையாளர்நேரடியாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நம்பிக்கை ஒளியின் திட்டத்தையும், பாராட்டியதோடு தொடர்ந்தும் சேவை செய்ய தாம் உறுதுணை அளிப்போம் எனவும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

    22 Mar 2012 01:07am
more...
Events
  • நம்பிக்கை ஒளி அலுவலகத் திறப்புவிழா
  • நம்பிக்கை ஒளி அலுவலகத் திறப்புவிழா இடம்: Unit G05 Courtenay Road, Eastlane Business Park Wemley,HA9 7ND காலம்: 18.03.2012 ஞாயிற்றுக்கிழமை நேரம்: பி.ப.3 மணி. நம்பிக்கை ஒளி தலைமை அலுவலகத் திறப்பு விழா வரும் (18.3.12) ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற இருப்பதால் அவ்வேளை தாங்களும் வருகைதந்து விழாவினைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். நன்றி. நம்பிக்கை ஒளி. Charity No:1146115 Tel:02086179343 Email:roh@theroh.org

    22 Mar 2012 01:32am
more...
Why not celebrate your kids’ Birthday with orphan kids!

உங்கள் பிள்ளைகளின் பிறந்த நாளில் ஆதரவற்ற குழந்தைகளை கொஞ்சம் மகிழ்விப்போம் !

more>>
Do your loved one’s anniversary with a charity event

உங்கள் அன்பானவரின் நினைவு நாளில் தானமாய் கொஞ்சம் தாயக துயர் துடைப்போம் !

more>>
Connecting Families Do your charity one to one !

நேரடியாக உறவுகளை தொடர்பாடி உங்கள் உதவிகளை செய்வீர் !

more>>